விண்ணைத்தாண்டி வருவாயா - Vinnaiththaandi Varuvaayaa





முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். எதிர்பார்பெய் மிஞ்சியது என சொல்ல கூடிய படம். வழக்கமான காதல் கதையானாலும் வித்தியாசமாக படம் எடுக்கப்பட்டிருப்பது ரொம்பவே நல்ல இருக்கு. மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் படம் என்றாலே ஒரு வித்தியாசமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆஸ்கார் தமிழன் எ.ஆர்.ரஹ்மானின் இசை என்றாலே அது ஒரு இன்னொரு எதிர்பார்ப்பு ஏற்ற்படுத்துகிறது. இப்படி இருக்கையில் இவிருவரும் சேர்ந்த பொது அந்த பீலிங்கை சொல்ல வார்த்தைகளே இல்லை... 

இப்படி இருக்கையில் பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோ பார்த்த பொது, மனதில் ஒரு திருப்தி.. வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு ஒருன் நல்ல படம் பார்த்த எபக்ட்.


ஒளிப்பதிவாளர் கௌதம் மேனன் சொன்ன மாதிரி சிம்புவும் த்ரிஷாவும் காதலிப்பதை ஒளிந்திருந்து படம் பிடித்தது மாதிரியே இருக்கு. அவ்வளவு அழகாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. லோகேசன்கல் சூப்பர். 

சிம்புவின் நண்பராக வருபவரும் சிம்புவும் சேர்ந்து இடை இடையே பண்ணுற சேட்டைகள் சிரிக்க வைக்கிறது..அதிலும் "உலகத்தில் எத்தனையோ பொண்ணுக இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய மட்டும் காதலிக்கணும்" என்றத சொல்லும் ஒவ்வரு நேரமும் ஒரு சிரிப்பு வரத்தான் செய்யுது.

படம் பார்த்த பிறகு நானும் கூறிய இரண்டாவது விடயம் இரண்டாவது பாதியில் ஒரு சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் என்பது தான். ஆனால் இன்று மாலை விஜே டிவியில் கோபிநாத் கௌதமுடனும் சிம்புவுடனும் நடத்திய "வின்னைதாண்டிய காதல்" எனும் நிகழ்ச்சியில் இந்த கேள்விக்கு கௌதம் சொன்ன பதிலை கேட்ட பிறகு ஏன் எண்ணம் முற்றாக மாறியது.. ஒரு படம் நீளுரதுக்கும் இவ்வளவு காரணம் இருக்கே என்ட்று யோசனை செய்யவும் வைத்தது. 

இந்த படம்ன் எவ்வளவு பேரை தொட்டிருக்குதேன்றல் இன்று அதே நிகழ்ச்சியில் சிம்பு சொன்ன ஒரு நிகழ்ச்சியே சாட்சியாக இருக்குது. அதாவது சிம்புவுக்கு ஒரு மின்னஞ்சல் வததாம் ஒரு ரசிகையிடமிருந்து சிங்கபோரிளிருந்து. அதாவது, தன்னை ஒரு பையன் ௩ வருடமாக சுத்து வருவதாகவும் ஆனா இவ்வளவு காலமும் ஓவனை கணக்கேடுப்பதும் இல்லை என்று. ஆனால் படம் மார்த்த பிறகு தானும் அந்த பையனின் வழியை அறிந்ததாகவும் அவனையே திருமண செய்யபோவதாகவும் கூறியது மனதை டச்சின் பண்ணியது.

படத்தில் பாடல்கள் சொன்னமாதிரி சூப்பர். ஹோச்சன, மன்னிப்பாய, ஆரோமலே, அன்பில் அவன் எனுப் பாடல்கள் மனதிலேயே நின்டிருக்கின்றன.

படம் பார்க்காதவர்களும் இருப்பார்கள். அதனால் மடத்தின் கிளைமாக்ஸ்ஐ பற்றி பேசுவதிலிருந்து தவிர்துகொல்கின்றேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக மொத்ததுல படத்துக்கு 9.5/10 மார்க்ஸ் கொடுக்கலாம்........

படத்தை பொய் பார்த்துட்டு நீங்களும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.....

அதுவரை.....

Adios......

Comments

Popular posts from this blog

Sri Lankan Photographers : What the hell are they doing?

11/11/2010 - The Day That Colombo Went Underwater!!

2017 Sri Lankan Holidays - Google Calendar ICS File